- எம்.வை.அமீர் -
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய காலாநிதி எம்.எம்.எஸ். ஜெஸீலுல் இலாகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
தேசத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள குறித்த நோய் தொடர்பாகவும் அதிலிருந்து மீழ்வது மற்றும் சிச்சைகள் தொடர்பாகவும் வைத்திய காலாநிதி ஜெஸீலுல் இலாகி, எடுத்துரைத்தார்.
சுமார் 150 க்கு மேற்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்களான எம்.ஏ.சி.எப்.மஸாயா, எம்.ஏ.சி.எம்.அமீன் உள்ளிட்டவர்களும் தாதி உத்தியோகத்தர்களான ஏ.எல்.ஏ.பதாஹ், எம்.சி.ஜின்னாஹ் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


0 comments:
Post a Comment