அன்மையிலும் தற்போது தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது ஆகிரியர் உதவியாளர் நியமனத்தை ஆசிரியர் தரத்திற்கு உயர்தி நிரந்தரமாக்குமாறும் கொடுப்பனவை அதிகரித்து தறுமாறும் கோரி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் அட்டாலைசேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் போராட்டங்களை மேற் கொண்டு வந்தனர்.
இந் நிலையில் இந்த ஆசிரியர் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது கூடிய விரைவில் இவர்களுக்கான தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். மகரகம தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தபட்டு வரும் கல்விமானி பட்டபடிப்புக்கான கிளை ஒன்றினை கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நிறுபட்டுள்ளது. இதனை வைபவ ரீதியாக ஆரபித்து வைக்கும் நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது இந் நிகழ்விற்கு பிரதம அதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் பாடநெறி விரிவுரையாளர்கள் பாடநெறி ஆசிரிய பயிலுணர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்.
ஆசிரியர் உதவியாளர்களின் போராட்டம் நியாயமானது தற்போது கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடுகைளில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. வர்த்தமானி அறிவித்தலின் படியே ஆசிரியர் உதவியாளர்கள் தெரிவு செய்யபட்டார்கள். இவர்களின் கொடுப்பனவு 4000.00 வில் இருந்து 10.000 ரூபாவாக அதிகரிக்கபட்டுள்ளது. தற்போது இவர்கள் ஆசிரியர் பயிற்சி காலாசாலையில் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இன்னும் 06 மாதத்தில் பயிற்சி முடிவடைந்து விடும். அதற்கு பிரகு இவர்களுக்கு 37ää000.00 சம்பளம் கிடைக்கும். அதுவரைக்கும் பொருத்திருக்க வேண்டும். ஆசிரியர் தொழில் செய்வதற்கு கட்டாயம் அந்த தொழில் தொடர்பில் பயிற்சி அவசியம் முழுமையான பயிற்சிகள் முடிவுரும் போதே இவர்கள் ஒரு ழுமுமையான ஆசிரியரகளாகின்றனர்.
அன்மையில் இவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு ஆர்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியாது சற்று பொருந்திருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். கொடுப்பனவு உட்பட இவர்களின் ஆசிரியர் தரத்தை மாற்றுவது என்றால் அமைச்சவை பத்திரம் தாக்கள் செய்ய வேண்டும் அங்கு அனுமதி பெற வேண்டும். திரசேரியிலும் பொது நிர்வாக சேவையிலும் அனுமதி பெற வேண்டும் இவை அனைத்தும உடனடியாக நடந்து விடாது. அதற்கு இன்னும் சில காலம் பொருத்திருந்தால் இவர்களின் அனைத்த கோரிக்கைகளும் பயிற்சி முடிவின் பின் நிரைவேறும். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக வந்த பிரகு தான் இவர்களின் நியமனத்தை போராடி பெற்றுக் கொடுத்தேன். அதே போல் இவர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன். இவர்களின் நலன் கருதி தற்போது கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலை பல்வேறு வளர்ச்சி படிகளை நோக்கி செல்கின்றது. இதன் அபிவிருத்திக்காக 85 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யபட்டள்ளது. அதேபோல் இலங்கையில் உள்ள எனைய ஆசிரியர் கலாசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
ஆசிரியர் தொழில் என்பது புனிதமானது அந்த தொழிலை செய்யும் பாக்கியம் யாருக்கும் கிடைக்காது அது உங்களுக்கு கிடைத்து இருப்பதை இட்டு சந்தோஷம் அடையுங்கள். உங்களுக்கு தான் கல்வியாளர்களiயும் வைத்தியர்களையும் சட்டதரணிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்க முடியும். மனித வாழ்வில் உயர்ந்தவர்களும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களே காரணமாக இருந்துள்ளார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வியே பெரும் மூலதனமாகும் அதனை உற்பத்தி செய்யும் ஆசிரியர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது கட்;டாயமானதாகும் அதை நான் கட்டாயம் செய்வேன் என்று கூறினார். இந்த நிகழ்வில் அதிதிகள் கௌரவிப்பும் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய பயிலுனர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
0 comments:
Post a Comment