- வினோத்-
திருத்தணியில் மோடியின் 67வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சித்தூர் சாலை சந்திப்பில் 67 அடி உயர கொடி கம்பம் நிறுத்தி கல்வெட்டு பலகையினை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழசை சௌந்தர்ராஜன் திறந்து வைத்தார். மேலும், திருத்தணி சன்னதி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்
. மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைக் கோயில் மேல் உள்ள வெள்ளி மையில் வாகன தேரினை முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை தாயாருடன் தேரினை வடம் பிடித்து இழுத்து மாட வீதிகளில் வடம் பிடித்து இழுத்து வந்தார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது, “ தமிழகத்தில் கந்து வட்டி கொடுமைகள் அறவே ஒழிக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
மேலும், மத்தியில் நடைபெறும் நரேந்திர மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை அளித்து வருகிறார்கள். ஆனால், திட்டமிட்டு எதிர்கட்சிகள் அதனை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். மேலும், ஆர்.கே. நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் துண்டு பிரசுரங்கள் மூலமாக வீடு, வீடாக பணம் கொடுக்கின்றனர். இதனை தமிழக தேர்தல் அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், முறையாக ஆர்.கே. நகர் தேர்தல் நடத்த மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்கள் முறைகேடான தேர்தல்களாக நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டினார்.” என்று இவர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் மாவட்ட தலைவர் லோகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ராஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர் மீனாட்சி, நகர தலைவர் ரமேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் வீரபரம்மாச்சாரி மற்றும் நகர பொருப்பாளர் சுகுமார் உள்பட 1,000க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment