• Latest News

    December 07, 2017

    2018 ஆம் ஆண்டு 197 நாட்கள் மாத்திரம் பாடசாலை நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    2018 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை தவணைகளின் அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

    இத்தவணைகள் அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள், கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் கல்வி நிறுவனங்களான ஆசிரியர் கலாசாலைகள், தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான பாடசாலை தவணைகள் பின்வருமாறு..

    முதலாம் தவணை 2018 ஜனவரி 2 முதல் 2018 ஏப்ரல் 6 ம் திகதி வரையும், இரண்டாம் தவணை 2018 ஏப்ரல் 23 முதல் 2018 ஆகஸ்ட் 3ம் திகதி வரையும் இடம்பெறும்.

    தொடர்ந்தும் மூன்றாம் தவணை 2018 செப்டெம்பர் 5 முதல் 2018 டிசம்பர் 7ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     முஸ்லிம் பாடசாலைத் தவணைகள் பின்வருமாறு ....

    முதலாம் தவணை 2018 ஜனவரி 2 முதல் ஏப்ரல் 11ம் திகதி வரையும்,  இரண்டாம் தவணை முதலாம் கட்டம் 2018 ஏப்ரல் 18 முதல் மே மாதம் 11 ம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் 2018 ஜீன் 18 முதல் ஆகஸ்ட் 17 வரையும், மூன்றாம் தவணை 2018 ஆகஸ்ட் 27 முதல் டிசம்பர் 7ம் திகதி வரையும், இடம்பெறும்.

    இதேவேளை அரசாங்க விடுமுறைகள், நோன்மதி விடுமுறைகள் மற்றும் சமய விடுமுறைகள் காரணமாக 2018 ஆம் ஆண்டு 197 நாட்கள் மாத்திரம் பாடசாலை நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2018 ஆம் ஆண்டு 197 நாட்கள் மாத்திரம் பாடசாலை நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top