• Latest News

    December 07, 2017

    கா.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்

    ம் முறை கா.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

    நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017 .12.12 முதல் 2017.12.21 வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.

    பரீட்சை காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. காலை 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்டை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்கவேண்டும்.

    இவ்வாறு பரீட்சைக்கு சமுகமளிக்கும் போது பரீட்சை அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு அவசியம் கொண்டுவரவேண்டும்.

    ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின் உடனடியாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும்.

    பரீட்சார்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம் , கையடக்கதொலைபேசி , இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைத்திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளிலும் தோற்றுவது தடைப்படும்.

    அத்துடன் இம்முறை பரீட்சை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும். பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்திற்கும், 

    பொலிஸ்திணைக்களத்திற்கும் அறிவிப்பதற்கு அனைத்து ஆலோசனைகளும் பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத எந்தவொரு நபரும் பிரவேசிக்க கூடாது.

    பரீட்சை தொடர்பாக முறைப்பாடுகளுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

    தொலைபேசி இலக்கம் 1911 பரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கம் 0112784208 , 0112784537 , 0113188350 , 0113140314 பொலிஸ் தலைமையகம் 0112421111 , பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கா.பொ.த. சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top