கல்வி அமைச்சின் மூலமாக மாணவர்களின் வாசிப்பு திறமையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் 3312 பாடசாலைகளுக்கு 700 மில்லியன் ரூபாய் நிதி இன்று அலரி மாளிகையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது 809 தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 218.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment