தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் நகரில் இன்று காலை 6 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினார். 8,21,000 மக்கட்தொகை கொண்ட கர்மீனுக்கு வடகிழக்கில் 58 கி.மீ தொலைவில் இத்தகைய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கமானது 6.3 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்திற்கு பின்னர் ரிக்டர் அளவு 6.0 என பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக ஈராக் எல்லையை ஒட்டிய ஈரான் பகுதிகளில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 540 பேர் பலியாகினர். மேலும் 8000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment