தொலைக்காட்சி பெட்டியை திருடினாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் கொஸ்தாபிள் ஒருவர் சாவகச்சேரி பொலிசாரால் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாச்சிக்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபிள் ஒருவர், நேற்று முன்தினம்(29) இரவு நாவற்குழி சந்திக்கு அண்மையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் முச்சக்கர வண்டியில் நின்றுள்ளார்.
அந்த வீதியால் வந்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய உயர் அதிகாரி குறித்த முச்சக்கர வண்டியை சோதனை செய்துள்ளார்.
அப்போது இரு நபர்கள் முச்சக்கர வண்டியில் இருப்பதை அவதானித்த அதிகாரி அவர்களை சோதனை செய்துள்ளார்.
முச்சக்கர வண்டிக்குள் தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் இருப்பதை கண்டு அது தொடர்பில் விசாரித்துள்ளார்.
அப்போது அவர் பொலிஸ் கொஸ்தாபிள் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவர் பொலிசாரின் விசாரணையின் போது ஒன்றுக்குபின் முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் போதை பொருள் பாவித்திருப்பதாக சந்தேகம் கொண்ட பொலிஸ் அதிகாரி அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.
அங்கும் அவர் அந்த தொலைக்காட்சி பெட்டி எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை என்றும் அவர் சாதாரண மனநிலையில் இருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த பொலிஸார் நேற்று(30) மாலை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments:
Post a Comment