• Latest News

    December 05, 2017

    தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசினால் புதிய நியமனங்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ குற்றச்சாட்டு

    ரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்பு துறைமுகத்தினுள் 3000 தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சைகளை நடத்துகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

    ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்..

    ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பனி நீக்கம் செய்வதற்கு துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதே வேளை, நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன எனவும் தொழில் அமைச்சின் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள போதும், அவரின் உத்தரவை மீறி துறைமுக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் ஆவர் தெரவித்தார்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தொழில்வாய்ப்பை வழங்குவதாக கூறி நடவடிக்கை எடுப்பதன் மூலம் தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ளமை மாத்திரமன்றி தொழில் சட்டத்தையும் மீறியுள்ளனர் என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

    அதேவேளை, அரசாங்கம் இன்றளவில் பொதுமக்களுக்கு பலவிடயங்களை காட்டி அச்சுறுத்தலை மேற்கொண்டேனும் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசினால் புதிய நியமனங்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top