ரயில்வே திணைக்களத்தில் பணிபுரிகின்ற ரயில் சாரதிகள் மற்றுமொரு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நாளை புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
ரயில்வே சாரதி உதவியாளர்களை இணைத்துக் கொள்வது பற்றிய முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னரும் இந்த கோரிக்கையை முன்வைத்து இரண்டு முறை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment