• Latest News

    December 31, 2017

    புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி கண்டி மாவட்டத்தில் முதலிடம்

    .- திருஞானம் - 

    அன்மையில் வெளி வந்த க.பொ.த (உத) பரீட்சை பெறுபேற்று படி புஸ்;ஸலாவ இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மணிமாறன் ஜசிதரன் பொறியிற் தொழில்நுட்ப பாட பிரிவில் கண்டி மாவட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் சித்தியடைந்துள்ளார் இவருக்கு சட்டப் பீடம் தெரிவாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

    இப் பாடசாலையின் அதிபர் ஆர். விஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களான எம். கோபிஸ்கண்ணா¸ கே.ஜெயந்தன்¸ ஏ.நித்தியானந்தன்¸ எம்¸ துசிர்தன்¸ ஆகியோரின்  கற்பித்தலில் இந்த பெறுபேறுகள் கிடைக்க பெற்றுள்ளன. அத்துடன்  பாடசாலையின் ஏனைய சகல ஆசிரியர்களினதும் ஒத்துழைப்புகள் கிடைபெற்றுள்ளதுடன் மாகாண¸ வலய கல்வி அதிகாரிகள் ஆசிரிய ஆலோசகர்களின் ஒத்துழைப்பும் கிடைக்க பெற்றுள்ளன.
    தொழில்நுட்ப பிரிவில் மேலும் பல்கலைகழகத்திற்கு உள் வாங்துவதற்கு 04 மாணவர்களும் விண்ணபிப்பதற்கு சகல மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர். கலை பிரிவில் 04   பல்கலைகழகத்திற்கு உள் வாங்துவதற்கும் 92 வீதமான மாணவர்கள் விண்ணபிப்பதற்கும் தகுதி பெற்றுள்ளனர். இதன் படி 09  மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு உள் வாங்துவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்து தேசிய  பாடசாலையின் வரலாற்றில் அதி கூடிய மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு உள் வாங்குவதற்கு கிடைக்க பெற்ற முதற் சந்தர்ப்பமாகும்.

    இவ் வெற்றிக்காக பாடுபட்ட  பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்களை பாடசாலையின் அபிவிருந்தி சங்கத்தின் உறுப்பினர்கள் பெற்றோர்கள்¸ பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

    குறித்த காலத்தில்  இந்து தேசிய பாடசாலையின் அதிபர் ஆர்.விஜேந்திரன் அவர்களில் வழி காட்டலில் பல்வேறு அபிவிருத்திகள் துரிதமாக மேற்க் கொள்ளபட்டு வருகின்றன. மேலும் இதன் பயனாக பாடசாலையின் பௌதிக வளங்கள்¸ ஆளணி வளங்கள் போதிய அளவில் கிடைக்க பெற்று வருகின்றன.

    மலையத்தில் காணப்படும் விரல் விட்டு எண்ணக் கூடிய   தமிழ்மொழி மூல தேசிய பாடசாலைகளில் (பெருந்தோட்டம்) இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் கல்வி இராஜாங்க அமைச்சரின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைக்க பெறுகின்றது. உயர்தர பரிட்சைக்கு 06 மாதத்திற்கு முன்னதாக தொழில்நுட்;டப பீடம் கல்வி இராஜாங்க அமைச்சரினால் சகல பொருட்களும் வழங்கபட்டு திறந்து வைக்கபட்டமை இப் பெறுபேற்றுக்கு பங்களிப்பு அளித்துள்ளது.  இது வரை காலப்பகுதியில் 15 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட நிதியினை இப் பாடசாலைக்கு ஓதுக்கியுள்ளார். இதில் மூன்று மாடி கட்டட நிர்வாக அலகு¸ இரண்டு மாடி கட்டட வாசிகசாலை¸ பாடசாலை திருத்தம். அதிபர் விடுதி ஆசிரியர்களுக்கான விடுதிகள்¸ பாதுகாப்பு மதில்கள்¸ நுண்கலை பிரிவு. துpறன் அபிவிருத்தி வகுப்பறைகள்¸ விN~ட தேவை உடைய மாணவர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய தனி அலகு¸ கறற்ல் கற்பித்தலுக்கான சாதணங்கள்¸ தளபாடங்கள் ஆகியன உள்ளடங்கும் மேலும் கல்விசாரா ஊழியர்களின் நியமனம். கல்வியற் கல்லூரியின் ஆசிரியர் நியமனங்கள்¸ தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும் இப் பாடசாலையின் தேவைக்கேற்ப வழங்கபட்டு வருவதும் குறிப்படதக்க ஒன்றாகும். இச் சந்தர்பத்தில் இவருக்கும் பாடசாலையின் அபிவிருந்தி சங்கத்தின் உறுப்பினர்கள் பெற்றோர்கள்¸ பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி கண்டி மாவட்டத்தில் முதலிடம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top