- திருஞானம் -
நுவரெலியா சீத்தாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு புதுவருட வரவேற்பை முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். கலந்துக் கொண்டார். (2017.12..29)
தொடர்ந்து பிரதமர் அவர்களுக்கு பொண்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கபட்டது.
ஆலயத்தை சுற்றி பார்த்த பிரதமர் எதிர்காலத்தில் அக்கல பூந்தோட்டத்தில் இருந்து ஆலயம் வழியாக நுவடிரெலியா செல்லும் பாதையினை அபிவிருத்தி செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதி கருதி வாகன தரிப்பிடம் உட்பட ஏனைய வசதிகளை மேற்க் கொள்ள சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந் நிகழ்வுகளில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர் .இராஜாராம் உட்பட அரசியல் பிரமுகர்கள்¸ நகர வர்த்தகர்கள்¸ ஆலய பரிபாலன சபையின் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்
0 comments:
Post a Comment