• Latest News

    December 06, 2017

    உலக கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    உலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

    32 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. ஏனைய 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலமாக தகுதி பெற்றன.

    பலம் வாய்ந்த அணிகளான இத்தாலி மற்றும் நெதர்லாந்து இம்முறை தகுதி பெறவில்லை. இந்நிலையில், மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு குலுக்கல் முறையில் ஒவ்வொரு அணியும் இடம் பெறும் பிரிவு தேர்வு செய்யப்பட்டது.

    இதில் "A" பிரிவில் ரஷ்யா உருகுவே எகிப்து சவுதி அரேபியா அணிகளும் "B" பிரிவில் ஸ்பெயின் போர்ச்சுகல் ஈரான் மொராக்கோ அணிகளும் "C" பிரிவில் பிரான்ஸ் பெரு டென்மார்க் அவுஸ்திரேலியா அணிகளும் "D" பிரிவில் அர்ஜென்டினா குரோஷியா ஐஸ்லாந்து நைஜீரியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    "E" பிரிவில் பிரேசில் சுவிட்சர்லாந்து கோஸ்டாரிகா செர்பியா அணிகளும் "F" பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி மெக்சிகோ சுவீடன் தென் கொரியா அணிகளும்

    "G" பிரிவில் பெல்ஜியம் இங்கிலாந்து துனிசியா பனாமா அணிகளும் "H" பிரிவில் போலந்து கொலம்பியா செனகல் ஜப்பான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ரஷ்யாவில் உள்ள 11 நகரங்களில், 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலக கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top