• Latest News

    December 06, 2017

    அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும் அறிவிப்புக்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம்

    யோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும் என அறிவிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என ஹைதராபாத் எம்பியும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கம்பீரமாக கட்டப்படும். அங்கு வேறு எதுவும் கட்ட அனுமதிக்க முடியாது, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுகே இடமில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் கூறினார்.

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற இந்து துறவியர் மாநாட்டில் பேசியபோது இதை தெரிவித்தார்.

    இந்நிலையில் ஹைதராபாத்தில் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி நடந்த கூட்டத்தில் ஹைதராபாத் எம்பியும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசுகையில்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்கு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட எந்த அதிகாரமும் கிடையாது. அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும் என இந்து துறவியர் மாநாட்டில் அறிவிப்டை வெளியிட இவர் யார்? இவருக்கு யார்? இந்த அதிகாரத்தை வழங்கினார்கள். எங்களை மிரட்டுவதற்காக கூறி இருக்கிறார் என்றால், நாங்கள் இதை கேட்டு மிரளுபவர்கள் அல்ல எனக்கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அயோத்தியில் ராமர் கோயில் மட்டுமே கட்டப்படும் அறிவிப்புக்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top