ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்த பின் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் நவம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி துவங்கியது. இதில் டிசம்பர் வரை 38 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 107 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சுயேட்சை வேட்பாளராக டிடிவி.தினகரன், விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உட்பட 126 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தற்போது ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் படிவம் என் 26-ஐ பூர்த்திபூர்த்தி செய்யாததே காரணம் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் விஷாலின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment