• Latest News

    December 07, 2017

    ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம் - இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளது

    யில் சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக இன்று சில ரயில் சேவைகளை ரத்து செய்ய நேர்ந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

    இருப்பினும் அலுவலக ஊழியர்களின் நலன்கருதி சில ரயில் சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் இன்று அதிகாலை தெரிவித்தார்.


    ரயில்வே வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் பயணிகளின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளது. போக்குவரத்து சபை சார்ந்த சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் விடுமுறைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம் - இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top