நேற்று காலை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் நிந்தவூருக்கு வருகை தந்தார். 1994ஆம் ஆண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால் அடிக்கல் நடப்பட்டு அரைகுறையாகவுள்ள அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபவத்தைப் பார்வையிட்டார். இம்மண்டபவத்தை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.
இவரது வருகையை எதிர்பார்த்திருந்த குழுவினர் அமைச்சர் ரவூப் ஹக்கிமை அன்போடு வரவேற்றார்கள். இவ்விடத்தில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் ஆங்கில பாட ஆசான் பஸீர் இம்மண்டபவம் நீண்ட காலமாக அரைகுறையாகவே உள்ளது. முன்னாள் அமைச்சர் ஹஸன்அலி செய்த நிதி ஒதுக்கீட்டினால் இந்தளவிற்கு கட்டப்பட்டுள்ளது. இதன் குறை வேலையை முடித்துப் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஹஸன்அலியைப் பற்றியெல்லாம் பேசக் கூடாதென்று கடும்தொனியில் சொன்னார்.
இதனை அங்கு வந்திருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. ரவூப் ஹக்கிமுக்கும் அசௌகரியமாக இருந்தது. அவருடைய முகம் மகிழ்ச்சியை இழக்கத் தொடங்கியது.
பின்னர் ரவூப் ஹக்கீம் சிறியதாக உரையாற்றினார்.
இம்மண்டபத்தை கட்டுவதில் மர்ஹும் எம்.ரி.ஜப்பார் அலி கடுமையாக பாடுபட்டார். என்னிடம் இதனைப் பற்றி எடுத்துக் கூறினார். அதன் நிமித்தம் நிதி ஒதுக்கீடு செய்தேன். இம்மண்டபத்தின் கட்டிட வேலைக்காக சென்ற போதே அவர் விபத்தில் மரணமானார் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு அவரின் பெயரை வைத்தாலும் நல்லதென்று தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment