• Latest News

    January 11, 2018

    அக்குப் பஞ்சர் சிகிச்சை முறை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைப்பு

     - பைஷல் இஸ்மாயில் - 

    ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை வைத்திய முறை வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    இதன்போது மூட்டுவாதம், சீனி வியாதி, உடற்பருமன், ஒற்றைத்தலை வலி, கால் மற்றும் கை விறைப்புத் தன்மை, பாலியல் பலயீனம், மனச் சோர்வு, முடி உதிர்தல், முகப்பரு போன்ற நோய்களுக்கு இந்த சிகிச்சை வழங்கி வைக்கப்பட்டன.

    இந்த அக்குப் பஞ்சர் சிகிச்சை வைத்தியம் மாதத்தின் இரண்டாம், நான்காம் கிழமைகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும், இந்த தினங்களில் 25 பேருக்கு மாத்திரமே இச்சிகிச்சை வழங்கி வைக்கப்படவுள்ளது என்று வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் இதன்போது தெரிவித்தார்.

    குறித்த தினத்தன்று மாத்திரமே இந்த நோயாளருக்கான அனுமதியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதற்காக முன் கூட்டிய அனுமதி வழங்கப் படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த சிகிச்சை முறையினை வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எம்.அஸ்லம் மற்றும் பர்வீன் முகிடீன், தொற்றாநோய்ப் பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி பஸ்மினா அறூஸ் ஆகியோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அக்குப் பஞ்சர் சிகிச்சை முறை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top