(எம்.என்.எம் அப்ராஸ்)
கல்முனை மண்ணின் கல்வி தரத்தின் முன்னேற்றம் மற்றும் அரசபணிகளில் பட்டதாரி சகோதர சகோதரிகளை பணியமர்த்தம் செய்வதற்கான
முயற்சிகளை மையமாக கொண்டு அரசாங்கத்தினால் நடாத்தப்படும் போட்டி
பரீட்சைகள் தொடர்பான விசேட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை இளம்
பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் (30-12-2017)கல்முனை இக்பால் சன
சமூக நிலையத்தில் இடம்பெற்றது.
குறிப்பிட்ட போட்டிப்
பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் வகுப்புக்கள் நடாத்துவதற்காக பிரசித்தம்
பெற்ற வளவாளர்கள் மற்றும் அரச நிர்வாக பிரிவில் பணி புரியும் அனுபவம்
வாய்ந்த உத்தியோகத்தர்களினால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இதில் காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சின்
உதவி
நிர்வாக இயக்குநர் எம்.அபான் காரியப்பர் ,மற்றும் பொது நிர்வாகம் மற்றும்
முகாமைத்துவ அமைச்சின் உதவி நிர்வாக இயக்குநர் ரிஸ்வான் எம். சலாகுத்தின்
மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் ஊடக வியலாளர் எஸ்.எம்.எம் முஸார்றப்
ஆகியோர் விரிவுரைகளை மேற்க்கொண்டனர்.


0 comments:
Post a Comment