- பா.திருஞானம் -
இந்தியா தமிழ்நாடு அரசாங்காத்தின்  உதவியுடன் இலங்கையின் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு ஒரு இலட்சம் நூல்களை இலவசமாக வழங்கும்  செயற்திட்டத்தினதும் இந்தியா இலங்கை மலேசிய கல்வி அமைச்சுகளின் மூலம் ஆசிரியர்கள் பறிமாற்றங்கள் ஊடாக அந்த அந்த நாடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் செயற்திட்டத்தினதும் அதற்கான அமைப்பு உருவாக்கம் தொடர்பான பேச்சுவார்ததை இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன்¸ இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  மலேசிய நாட்டின்  கல்வி அமைச்சின் துனண உயர்கல்வி அமைச்சர்  பா.கமலநாதன் ஆகியோருக்கும் இடையில் இந்தியா தமிழ் நாடு அரசாங்கத்தின் பிரதான செலயகத்தில் இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை  அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.
இச் சந்தர்பத்தில் இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன் அவர் இலங்கையின் கல்வி அ.இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  மலேசிய நாட்டின்  கல்வி அமைச்சின் துனை உயர்கல்வி அமைச்சர் பா.கமலநாதன்   ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டார்கள் 
தொடர்து மேற்படி பேச்சுவாரத்தையின் மூலமாக இந்த செயற்த்திட்டங்களை மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைமுறைபடுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கபட்டது
0 comments:
Post a Comment