• Latest News

    January 11, 2018

    நல்லாட்சியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் ஒன்றாகவே தேர்தல் அமையும் - தவிசாளர் அப்துல் மஜீத்

    - எம்.வை.அமீர் - 

    நடக்கவிருக்கின்ற தேர்தலானது பிரதேச ரீதியாகவும் தேசிய அளவிலும் ஏன் சர்வதேச அளவிலும் உற்று நோக்கப்படும் தேர்தலாகவே அமையும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

    கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கியதேசிய கட்சியில் போட்டியிடும் 23 ஆம் இலக்க வேட்பாளர் ஏ.எம்.முபாறக்கை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    2015 ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்றும் நல்லாட்சி தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை அறியக் கூடியதாக  இத்தேர்தல்  அமையும் என்றும் சர்வதேசம் இந்தத் தேர்தலை மிக முக்கியத்துவம் மிக்கதாக அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் மறுபுறம் மகிந்த ராஜபக்சவை பிரதமாராக அமர்த்துவதற்கு ஒரு முன்னோட்டம் பார்க்கும் தேர்தலாகவும் அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இன்றைய முக்கியத்துவமிக்க காலகட்டத்தில் கல்முனை மாநகரசபையை முஸ்லிம்கள் தனித்துவமாக ஆளக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இருப்பதாகவும் கல்முனையின் நலன்பற்றியும் முஸ்லிம்களின் அடையாளம் பற்றியெல்லாம் யோசிப்பவர்களும் நடைபெறவுள்ள தேர்தலில் எடுக்கப்போகும் முடிவில்தான் கல்முனையின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    நிகழ்வில் கட்சியின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுதீன்., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான ஆரம்பகால  அமைப்பாளரும் கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் குழுவின் தலைவருமான  ஏ.எல்.எம்.றசீட் (புர்கான்ஸ்), உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் வேட்பாளருமான ஏ.சி.யஹ்யாகான், சாய்ந்தமருது அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.நஸார்டீன், காரைதீவு பிரதேசசபை வேட்பாளர் இஸ்மாயில், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 ஆம் பிரிவு அமைப்பாளர் எம்.எஸ்.அஹமட் உள்ளிட்டவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நல்லாட்சியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் ஒன்றாகவே தேர்தல் அமையும் - தவிசாளர் அப்துல் மஜீத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top