போக்குவரத்துத் தொடர்பான தவறுகளுக்கு வழங்கப்படும் தண்ட பணத்திற்கான பற்றுச்சீட்டு அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளது.
வாகனப் போக்குவரத்துச் சட்டங்களை மீறியதற்காக வழங்கப்படும் தண்ட பற்றுச்சீட்டை வீடுகளுக்கு அனுப்பிவைக்கும் பரீட்சார்த்த வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
தேசிய செஞ்சிலுவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு முதலுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment