போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 12.01.2018 அன்று முன்னிரவு வரை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பேருந்து நிலையங்களில் பணியில் இருந்த பணியாளர்களிடமும், பயணிகளிடம் ஏதேனும் இடர்பாடுகள் இருந்ததா எனவும் கேட்டறிந்தார்.
2018 பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்-26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியத்தில்)-2 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்டரும் ஆக மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 11.01.218 முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.
11.01.2018 மற்றும் 12.01.2018 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 54,440 பயணிகளும், இதர இடங்களிலிருந்து 28,404 பயணிகளும் ஆகமொத்தம் 82,844 பயணிகள் முன்பதிவு செய்து இதுவரை பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்யாத அனைத்து பயணிகளும் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வசதியாக கூடுதலாக தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது
11.01.2018 மற்றும் 12.01.2018 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இதுவரை 4242 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,27,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் 1039 சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின் மொத்தம் 7841 சிறப்பு பேருந்துகள் அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கப்படும்.
0 comments:
Post a Comment