
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.பாஸித் 10 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பொத்தவில் பிரதேச சபைக்குரிய தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் ஆகியோர்களை தெரிவு செய்யும் அமர்வு இன்று காலை 11.30 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற வாக்களிப்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.பாஸித் 10 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பார்த்தீபன் 09 வாக்குகளைப் பெற்று உதவித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment