அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் எதிர்க்கட்சியுடன் இணைவது
தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர், கடிதம் மூலம்
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவிக்கவுள்ளதாக, தனது இராஜினாமா கடிதத்தை
சமர்ப்பித்திருக்கும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், மே 08 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சியின் மத்திய செயற்குழு கூடி, தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா
இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment