• Latest News

    May 17, 2018

    கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது : ராகுல்காந்தி

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் கர்நாடக ஆளுநர் அரசியல் சட்டத்தை கேலிக்குரியதாக்கிவிட்டார் என்று தெரிவித்தார். இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பாஜகவினர் கொண்டாடுகின்றனர். ஜனநாயகம் தோற்றகடிக்கப்பட்டதற்காக இந்தியா வருந்தும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து தேரத்ல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவில் பாஜக-104 இடங்களிலும், காங்கிரஸ்-78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களிலும் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்கள் வேண்டும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்று கேள்வி குறியானது. இதனையடுத்து காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிடம் நிபந்தனையற்ற கூட்டணியில் சேர்ந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதல்வர் பதவி வகிக்கவும் ஒப்புக்கொண்டது.

    இந்நிலையில் எடியூரப்பா தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநரிடம்  வலிறுத்தினார். எடியூரப்பாவை தொடர்ந்து காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் தாங்கள் பெரும்பான்மையாக உள்ளதாக ஆட்சியமைக்க அழைக்க மஜத கட்சி தலைவர் குமாரசாமி ஆளுநரிடம் கோரினார். இந்நிலையில் ஆளுநர் எடியூரப்பாவை இன்று பதவி ஏற்க அழைத்து விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரவு 1 மணியில் நடைபெற்ற விசாரணை விடிய விடிய நடைபெற்றது. இதனையடுத்து உச்சநீதிமன்ற எடியூரப்பா பதவி ஏற்க தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கின் விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பாவை அழைத்து ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது : ராகுல்காந்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top