கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா தனது முதல் கையெழுத்தாக
ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். கர்நாடகாவில் 222
தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை
கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ்-மஜத இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
இந்நிலையில் தாங்கள் தனிபெரும்பான்மை பெற்றுள்ளோம், எனவே தங்களையே ஆட்சி
அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உரிமை
கோரினார்.
இந்நிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், இன்று காலை 9 மணி அளவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பாவை பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து முதல்வர் பதவி ஏற்ற எடியூரப்பா இன்று முதல் முதல்வர் பணியை தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக விவசாய கடன் ரூ.56 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார். இதற்குபின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எடியூரப்பா அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே நான் முதல்வராக பதவி ஏற்றுள்ளேன், அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் நாடகம் ஆடுகின்றனர். தாங்கள் விரும்பியவர்களுக்கு கர்நாடக மக்கள் வாக்களித்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
நான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காகதான் கர்நாடக மக்கள் வாக்களித்தனர், தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் எடியூரப்பா கூறினார். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன், விரைவில் கடன் ரத்து ஆணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளதை சட்டப்பேரவையில் நிருபித்து காட்டுவேன், மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment