• Latest News

    May 18, 2018

    நான்கு ஆண்டுகளாக மலசல கூடம் பயன்படுத்தவில்லை: கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க

    மாநகர சபை உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் உள்ள மலசல கூடம் கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை. அதனைத் திருத்துவதற்கே 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

    மாநகர சபையின் அமர்வு 16ஆம் திகதி நடைபெற்ற போதே இதனை அவர் தெரிவித்தார்.

    ஜே.வி.பியின் உறுப்பினர் சுமித்பாச பெரும மேயரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மலகூடத்திற்கு ரூபா 57 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதென்று தெரிவித்த போதே மேயர் ரோஸி சேனநாயக்க மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

    கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பொது மக்கள் பயன்படுத்தும் பல மலசல கூடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நிலையில் இவ்வளவு பெரும் தொகை நிதியை மேயரின் உத்தியோகபூர்வ இல்ல மலசல கூடத்திற்கு ஒதுக்கியுள்ளமை கவலைக்குரியதென்றும் சுமித்பாச பெரும சபையில் தெரிவித்தார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான்கு ஆண்டுகளாக மலசல கூடம் பயன்படுத்தவில்லை: கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top