சீன அரசாங்கம், மத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டோலர்களை வழங்கவுள்ளது.
அலரிமாளிகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவருக்குமிடையிலான Cheng Xueyuan சந்திப்pபின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிதி சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர் இதனை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment