• Latest News

    May 17, 2018

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் போது….

    - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் -
    கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தைச் சீராகக் கொண்டு செல்லும் வகையில் நிலையியல் மற்றும் நிதிக்குழுக்களை அமைப்பது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்குமிடையில் இது தொடர்பில் நேற்று முன்தினம் (15) கொழும்பில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

    அதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் விடுத்த வேண்டுகோள்களுக்கும் கருத்துகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (கூட்டு) உறுப்பினர்கள் சிலர் கடும் தொனியில் கூறியவற்றை இங்கு பதிவிடுகிறேன்.

    தரப்பு-1: கல்முனை மாநகர சபையில் நிலையியல், நிதிக்குழுக்களை நியமிப்பதில் உங்களது ஆதரவு வேண்டும்.

    தரப்பு-2: அதனை காத்தமுத்து கசேணஸிடம் போய்க் கேளுங்கள்.

    தரப்பு-1: உங்களுக்கு நிதிக் குழுவில் மூன்று இடங்களைத் தருகிறோம்.

    தரப்பு-2: நாங்கள் என்ன பதவி ஆசை பிடித்தவர்களா?

    தரப்பு-1: காத்தமுத்து கணேஷை ஒரு வருடம் மட்டுமே பிரதி மேயராக வைத்திருப்போம். பிறகு பார்த்துச் செய்வோம்.

    தரப்பு-2:ஏன் நீங்கள்தானே காத்முத்து கணேசை வைத்து மேயர் பதவியை எடுத்தீர்கள். அவரை வைத்தே ஏனையவற்றையும் செய்து கொள்ளுங்கள்.

    தரப்பு-1: (மீண்டும்) காத்தமுத்து கணேசை ஒரு வருடம் மட்டுமே நாங்கள் வைத்திருப்போம்.அதற்குப் பின்னர் அஜெஸ் பண்ணி தந்து விடுவோம்

    தரப்பு-2: நீங்கள் எங்களுக்கு பிச்சை போடத் தேவையில்லை. டிப்பிட்டியூ மேயர் எங்களுக்குத் தேவைப்பட்டிருப்பின் உங்களுடன் ஆரம்பத்திலேயே பேசி அதனைப் பெற்றிருப்போம்.

    தரப்பு-1: எங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
    தரப்பு-2: அப்படியா? அப்படியென்றால் நாங்கள் உங்களிடம் முன்வைத்த மூன்று டிமாண்ட்களையும் நிறைவேற்றுவீர்களா? அதனை நிறைவேற்றி விட்டு வாருங்கள் பிறகு இதனைப் பற்றி யோசிக்கலாம்.

    தரப்பு-1: (மீண்டும்) காத்தமுத்து கணேசை ஒரு வருடம் மட்டுமே நாங்கள் வைத்திருப்போம். அதற்குப் பின்னர் அஜெஸ் பண்ணி தந்து விடுவோம்.

    தரப்பு-2: எங்கள் முடிவில் மாற்றம் இல்லை. நாங்கள் உங்களிடம் முன்வைத்த டிமாண்ட்களை நிறைவேற்ற நீங்கள் தயாராக இல்லை. இதனால் உங்களுடன் ஒத்துழைக்க நாங்களும் தயாராக இல்லை.நீங்கள் சபை மூலம் முன்னெடுக்கும் நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்வோம். கெட்டவற்றை எதிர்ப்போம். நீங்கள் சபையைத் தொடர்ந்து நடத்துங்கள். ஜனநாயக ரீதியாக நீங்கள் செயற்படுபவர்களாக இருந்தால் வாக்கெடுப்பை நடத்துங்களேன் பார்ப்போமே.

    தரப்பு-1: (மீண்டும்) காத்தமுத்து கணேசை ஒரு வருடம் மட்டுமே நாங்கள் வைத்திருப்போம்.அதற்குப் பின்னர் அஜெஸ் பண்ணி தந்து விடுவோம்.

    தரப்பு-2: அப்படிச் செய்யாதீர்கள். காத்தமுத்து கணேஸ் உங்களை நம்பி வந்தவர். நான்கு வருடங்களுக்கும் அவரே இருந்து போகட்டும். அவர் உங்களை நம்பி வந்தவர். அவருக்கு வழங்கிய வாக்குறுதியை நீங்கள் மீறாதீர்கள். மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்படாதீர்கள். பிச்சை எடுக்கும் கூட்டம் TNA என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களது பிச்சையில் நாங்கள் வாழ வேண்டுமென்று? அந்தத் தேவை எமக்கு இல்லை.

    தரப்பு-1: இல்லை அவர் (காத்தமுத்து கணேஸ்) சரி வரமாட்டார். ஒரு வருசம் மட்டும்தான் அவரை வைப்போம்.

    தரப்பு-2: உங்களை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. காத்துமுத்து கணேசை டிப்பியூட்டி மேயராக நீங்கள் வைத்திருந்தாலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தரமாட்டோம். அவரைக் கழட்டி விட்டாலும் உங்களுக்கு ஆதரவு தரமாட்டோம். அதேபோல் உங்களை நம்பி வந்த அவருக்கு (காத்தமுத்து கணேஷ்) துரோகம் செய்யாதீர்கள்.
    From Face Book -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் போது…. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top