• Latest News

    June 01, 2018

    மக்களின் அத்தியாவசிய தேவைகளை கல்முனை மாநகர சபை ஆணையாளர் நிறைவேற்றவில்லை: மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஷ்மீர் குற்றச்சாட்டு

    (எஸ்.அஷ்ரப்கான்)
    கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஷ்மீர் தனது சாய்ந்தமருது 19ஆம் வட்டார மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித்தரும்படி கல்முனை மாநகர ஆணையாளரை வேண்டியும் இதுவரை அந்த தேவைகளை நிவர்த்திசெய்து தரப்படவில்லை என  மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஷ்மீர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீபிடம் இது தொடர்பாகன மகஜர் ஒன்றினையும் கையளித்தார்.

    இதன்போது இங்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

    முஹர்ரம் பஷ்மீர் முன்வைத்த அக்கோரிக்கை மகஜரில் உள்ளடங்கும் பின்வருவனவாகும். இடைநடுவில் விடுபட்டுள்ள தேவைகளான சாய்ந்தமருது பழைய சந்தை வீதி,  மாவடிவீதியின் பகுதி, பி.எம். வீதியில் காணப்படும் 3 குறுக்கு வீதிகள், பழைய சந்தை வீதியில் காணப்படும் 2 குறுக்கு வீதிகள், ஒஸ்மான் வீதியில் காணப்படும் 2 குறுக்கு வீதிகள், மாவடி வீதியில் காணப்படும் 1 குறுக்கு வீதி ஆகியவற்றின் பகுதிகளை புனரமைத்தல்.

    ஜனாஸா நல்லடக்கத்தின்போது தேவைப்படுகின்ற பொருட்கள் பெறுவதில் பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அதனை நிறைவு செய்யும் பொருட்டு அப்பொருட்களை பாதுகாப்பாக மையவாடியினுள் வைப்பதற்காக அக்பர் மையவாடியில் ஒரு களஞ்சிய அறை அமைத்தல்.

    மையவாடியினுள் சிரமமின்றி மக்கள் செல்வதற்கு அதற்கான உள்ளக வீதிகளை அமைத்தல் மற்றும் புனர் நிர்மாணம் செய்தல்.

    ஜனாஸா நல்லடக்கத்தின்போது மழையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மையவாடியினுள் கூடாரமொன்றை அமைத்தல்.

    கடற்கரை மைதானத்தில் செய்யப்பட வேண்டிய மற்றும் மீதி வேலைகளை செய்தலும் புனரமைத்தலும் போன்ற முன்மொழிவு அபிவிருத்திகளை செய்து தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதற்கான நடவடிக்கைகளை இயலுமானவரை விரைவில் செய்து தருவதாக இங்கு உயர் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்களின் அத்தியாவசிய தேவைகளை கல்முனை மாநகர சபை ஆணையாளர் நிறைவேற்றவில்லை: மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஷ்மீர் குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top