• Latest News

    August 21, 2018

    ACMC பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பெருநாள் வாழ்த்து

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் தேசிய ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாதவாறு சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதுடன் அதே அடிப்படையில் எமது சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; 

    அல்லாஹவின் கட்டளையை ஏற்று தனது அன்புப் புதல்வனையே அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ய துணிந்த நபி இப்றாகிம் (அலை) அவர்களின் தியாகத்தினை நினைவுகூரும் சரித்திர பிரசித்தி பெற்ற இப்புனிதத் திருநாளில் முஸ்லிம்களாகிய நாம் தியாக மனப்பான்மையுடன் எமது சமுதாயத்தின் எழுச்சிக்காக உழைக்க தயாராக வேண்டும்.

    இன்று நமது அரபு, முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையின்மையினால் முஸ்லிம் சமூகம் பாரிய அழிவுகளை எதிர்கொண்டு வருகின்றது. அரபு நாடுகள் தமக்குள் முரண்பட்டு, பரஸ்பரம் காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் முஸ்லிம் உம்மா பலவீனப்பட்டு, முஸ்லிம் நாடுகளுக்குள் அந்நியர் அத்துமீறி, மனித உயிர்களை காவு கொள்கின்ற அக்கிரமங்கள் அரங்கேறி வருகின்றன.

    உலகின் எந்த மூலை முடுக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் அவர்கள் எமது இஸ்லாமிய சகோதரர்கள் என்ற உணர்வு ஏற்படாதவரை ஒருபோதும் அந்நியரிடமிருந்து எம்மால் விடுதலை பெற்று நிம்மதியாக வாழ முடியாது. ஆகையினால் ஹஜ் கடமை எமக்கு கற்றுத்தருகின்ற ஒற்றுமை, சகோதரத்துவம், தியாகம், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற அனைத்து நற்பண்புகளையும் கடைப்பிடிக்க உறுதி பூணுவோம்.

    உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அனைத்து உரிமைகளுடனும் தலைநிமிர்ந்து வாழவதற்கான சமாதான சூழல் மலர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ACMC பிரதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பெருநாள் வாழ்த்து Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top