• Latest News

    August 21, 2018

    முஸ்லிம்களுக்கெதிரான அறிவியல் ரீதியான நெருக்குதல்களை முறியடிக்க இத் தியாகத்திருநாளில் பிரார்த்திப்போம் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

    (அகமட் எஸ்.முகைடீன்)
    தியாகத்திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் உம்மத்தின் நிம்மதியான இஸ்லாமிய வாழ்விற்கு வல்ல இறைவனை இருகரமேந்தி பிரார்த்திப்போம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  

    பிரதி அமைச்சரின் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அறிவியல் ரீதியான நெருக்குதல்களை முஸ்லிம் உம்மத்தினர் எதிர்கொண்டுள்ள இக்காலத்தில் புனித இஸ்லாம் மார்க்கத்தின் நெறிமுறைகளை கடைப்பிடித்து நிம்மதியாக வாழ்வதற்கும் அறிவியல் ரீதியான தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் இத்திருநாளில் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

    இறை ஆணைக்கு கட்டுப்பட்ட தியாக சீலர்களான இறைதூதர் இப்றாஹிம் (அலை), அவரது துணைவியார் அன்னை ஹாஜரா (அலை), இவர்களது தவப்புதல்வன் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும் அரப்பணிப்பையும் மன உறுதியையும் நினைவு கூரும் இத்திருநாளில், நாமும் அத்தியாக உணர்வை நினைவில் நிறுத்தி இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றி முன்மாதிரியான சமூகமாக வாழ்வதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும்.

    நற்செயல்களை கடைப்பிடிக்கும் இறை நேசர்களாக செயற்பட்டு ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவதற்கும் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் ஹாஜிகளின் ஹஜ் இறை ஏற்றம் பெறுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு தியாகத்திருநாளை கொண்டாடும் அனைத்து ஈமானிய நெஞ்சங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் 'தகப்பலல்லாஹூ மின்னா வமின்கும்'.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களுக்கெதிரான அறிவியல் ரீதியான நெருக்குதல்களை முறியடிக்க இத் தியாகத்திருநாளில் பிரார்த்திப்போம் - பிரதி அமைச்சர் ஹரீஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top