• Latest News

    August 21, 2018

    மு.கா. செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரின் பெருநாள் வாழ்த்து

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    ஹஜ் எமக்கு புகட்டும் பாடங்களில் அன்னை ஹாஜரா அவர்கள் வெளிப்படுத்திய இறை நம்பிக்கை என்பது எமது இஸ்லாமிய பெண்களுக்கு பெரும் முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    அந்த வாழ்த்து செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

    இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று அரசியல் ரீதியாக பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை சந்தித்தோம். சர்வதேச ரீதியிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதமில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

    எவ்வாறாயினும் முஸ்லிம்களையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இறைவன் நிச்சயம் பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவான் என்பதில் நாம் அசையாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு நல்லதோர் முன்னுதாரணமாக அன்னை ஹாஜரா அவர்கள் திகழ்கிறார். துளியளவும் சந்தேகமின்றி அவரது இறை நம்பிக்கை அமைந்திருந்தமையை நான் வெகுவாக மெச்சுகின்றேன். இறைவன் மீதான அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையினால் அன்னை ஹாஜரா அவர்கள், தன் கண்முன்னே வெற்றியைக் கண்ட சமபவத்தில் நமக்கு பெரும் படிப்பினை இருக்கிறது.

    அவ்வாறு எமது செயற்பாடுகளும் இறை நம்பிக்கையுடன் முன்னெடுக்கப்படுமானால் வெற்றி என்பது வெகு தொலைவில் இருக்காது என்பதை ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்ற இப்புனிதமிகு திருநாளில் புரிந்து செயற்படுவோமாக.

    அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.கா. செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரின் பெருநாள் வாழ்த்து Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top