யூ. கே. காலித்தீன் -
"டெங்கு
அற்ற மஸ்ஜிதுல் ஹைராத் மஹல்லா" என்ற தொணிப் பொருளில் மஸ்ஜிதுல் ஹைராத்
நிருவாகத்தின் வழிகாட்டலில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அகற்றும்
மாபெரும் சிரமதானப் பணி இன்று (8.12.2018) வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இப்பணிக்கு முழுப்பங்களிப்பு செய்த கல்முனை தெற்கு சுகாதார
வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். ரிஸ்பின், பொது சுகாதார
உத்தியோகத்தர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள், மனிதவள
அபிவிருத்தி அமைப்பினர், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர், ஊழியர்கள் சமுக சேவை அமைப்பினர்,மாணவ அமைப்பினர் மற்றும்ஒத்துழைப்பு வழங்கிய மஹல்லா வாசிகள், அனைவருக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடுடெங்கு அற்ற கல்முனை என்பதே எமது இலக்காகும்.
அதற்கு ஏனைய பள்ளிவாசல்களின் நிருவாகங்களும் சமுக அமைப்புக்களும் முன் வருவதே எமது எதிர்பார்ப்பாகும். எனவும் மஸ்ஜிதுல் ஹைராத் நிர்வாகத்தினர் தனது நன்றியுரையில் தெரிவித்தனர்.



0 comments:
Post a Comment