கூகிள் தேடு பொறி உலகில் உள்ள அனைத்து மக்களினாலும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இன்று கூகிள் இல்லை என்றால் பலருக்கு உலக விடயங்களே தெரியாது
என்னும் அளவுக்கு கூகிள் மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ளது.
கூகிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தமது தேடு பொறியில் தேடப்படும் விடயங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகின்றது.
எந்த தேடல் வசனம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எந்த நாடுகளில்
இருந்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் ஒவ்வொரு வருட
இறுதியிலும் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் , இந்த வருடம் “செக்ஸ்” என்கின்ற சொல்லில் தேடிய நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னரான காலப்பகுதியில் “செக்ஸ்” தேடலில் இலங்கை முதலாமிடம்
வகித்தது. இந்த வருடம் இதன் இடம் மூன்றாவதுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இம்முறை “செக்ஸ்” என்கிற விடயத்தை தேடிய நாடுகளில் பங்களாதேஷ் முதலிடத்திலும் எதியோப்பியா இரண்டாமிடத்திலும் உள்ளது.
அதேவேளை மூன்றாமிடத்தில் உள்ள இலங்கையில் இந்த வசனத்தை தேடிய இடமாக வட
மத்திய மாகாணத்தின் பிகிம்பியாகொல்ல என்னும் இடம் உள்ளமை
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment