ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
0 comments:
Post a Comment