ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகத் தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்பினரால் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பிரதம நீதியரசர் உள்ளிட்ட 7 நீதியரசர்கள் கொண்ட குழாமால் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில், உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

0 comments:
Post a Comment