• Latest News

    December 04, 2018

    சட்டரீதியான அரசாங்கம் இருந்தால்தான் பொதுத் தேர்தலை நடத்தலாம் - ரணில்

    பொதுத் தேர்தலொன்று அ​வசியமெனின் சட்டரீதியான அரசாங்கம் ஒன்றை அமைத்து  அதன் பின்னர் பொதுத் தேர்தல் தொடர்பான அபிப்ராயத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
    இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    சகல கட்சிகளும் ஒன்று சேரும் தினத்தில் தேர்தலொன்றை நடத்தவது தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
    சட்டரீதியான அரசாங்கமொன்று நாட்டில் காணப்பட்டால் மாத்திரமே சகல கட்சிகளும் தேர்தலொன்றுக்குச் செல்ல இணங்குமென மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளதெனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சட்டரீதியான அரசாங்கம் இருந்தால்தான் பொதுத் தேர்தலை நடத்தலாம் - ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top