சர்வதேச ரீதியாக இலங்கைக்கு புதிய நெருக்கடி எற்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான பிச் ரேடிங்ஸ் இலங்கைக்கு நீண்ட கால வெளிநாட்டு அந்நிய செலவாணிக் கடன் வழங்தல் தொடர்பாக இலங்கைக்குரிய தரப்படுத்தலை B+ இல் இருந்து B நிலைக்கு குறைத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக கொள்கைகளில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை, உரிய காலத்தில் வரவு - செலவுத் திட்டம் முன் வைக்காமை, வெளிநாட்டுக் கடனை திருப்பிக் கொடுப்பதில் உள்ள ஆபத்தான நிலை போன்றவைகளினால் தரப்படுத்தலில் இலங்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதே வேளை, இலங்கை கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியிலிரந்து 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை காலத்திற்குரிய கடனாக 20.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிச் ரேடிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத வேளை கடன் வழங்கலை தரப்படுத்தும் மற்றுமொரு நிறுவனமான முடீஸ் நிறுவனம் இலங்கைக்கு B1 இருந்து B2 ஆக தரப்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment