முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்குவதற்கு
பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள்
வெளியாகியுள்ளன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய
அமைச்சரவையில் சரத்பொன்சேகா இடம்பெறவில்லை.
ஐக்கியதேசிய கட்சியினர் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன
சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுத்துள்ளார்.
அரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை
கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டியே ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன சரத்பொன்சேகாவை
அமைச்சராக நியமிப்பதற்கு மறுப்புத் தொிவித்தாகவும் தொிவிக்கப்படுகின்றன.
ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள்
பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment