• Latest News

    January 22, 2019

    சஊதி அரபியா அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்

    முன்னாள் அமைச்சர் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின்  வேண்டுகோளுக்கு அமைய சஊதி அரபியா  அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்! 

    சஊதி நாட்டு தூதுவர் உத்தியோகபூர்வமாக காத்தாகுடியில் ஆளுனரிடம் தெரிவித்தார்.

    இலங்கைக்கு இதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையை கருத்திற்கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக  இருந்த முன்னாள் அமைச்சர் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் பொறுப்பேற்றவுடன் உடனடியாக சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் "அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித்" அவர்களுடனும் முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல்  ஆலமி அல் இஸ்லாமி செயலாளர் "கலாநிதி ஈஸாயி" , சஊதி  இளவரசர் "முக்ரின்" உட்பட பல தரப்பினர்களோடு பேசி  2500 கோட்டாவை ஆக குறைந்தது 1000 ஆக  அதிகரித்து 3500 தர வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

    இதனை பரீசிலித்த சஊதி அரசு இலங்கையின் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பான இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு  வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ச ஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்து உத்தியோகபூர்வமாக முன்னாள் அமைச்சர் ஆளுநர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு தெரிவித்தார். 

    இது தொடர்பாக ஆளுனரிடம் வினவிய போது இரண்டு வாரம் காலம் இந்த அமைச்சை பொறுப்பேற்று 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற எனது முயற்சி வெற்றியளித்துள்ளது. நம் பெருமையடைகிறேன் ,அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்  என  ஆளுநர் தெரிவித்தார்.

    M.Rifas
    0773165003
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சஊதி அரபியா அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top