வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொது மக்கள் கூடியிருப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இன்று காலை 8.45 முதல் 9.00 மணிக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Ruwan Gunasekara தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து பின்னர் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதனால் ஆபத்து நிலைமை காணப்படுவதாகவும் காயமடைந்தவர்களை கொண்டு செல்வதில் இடைஞ்சல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் சம்பவ இடங்களிலிருந்து ஒதுங்கி பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment