• Latest News

    May 13, 2019

    சிலாபத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் திங்கள் காலை 04 மணிக்கு நீக்கப்படும்

    சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
    சிலாபம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
    தாக்குதலுக்கு தயாராவதாக முகநூலில் வெளியாகிய போலிச் செய்தி ஒன்றை அடுத்து, சிலாபம் நகரில் உள்ள வணிக நிலையங்களுக்குள் புகுந்த கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டதாககூறப்படுகிறது.
    இதையடுத்து. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், அனைத்து வணிக நிலையங்களும்அடைக்கப்பட்டன.
    வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கலைக்க இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச்சூடுகளையும் நடத்தியுள்ளனர்.
    இதையடுத்து, இன்று பிற்பகல் தொடக்கம் நாளை காலை 6 மணிவரை சிலாபம் பொலிஸ்பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
    முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த ஒருவரை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர். சிலாபம் ஜயபிம என்ற பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
    அத்தோடு, பிரதேசத்தில் அமைதியை பேணும் வகையில் நாளை காலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
    அத்தோடு, பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
    சிலாபத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த ஒருவரை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர். அதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    அதன் பின்னர் சந்தேகநபரை விசேட அதிரடைப்படையினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
    பிரதேசத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிலாபத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் திங்கள் காலை 04 மணிக்கு நீக்கப்படும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top