உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ சமுதாயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதனை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷ அணியினரே உள்ளனர்...அவர்களின் ஆசியுடனேயே தாக்குதல்கள் இடம்பெற்றன.
இன்றைய அரசாங்கத்தை அரசியல் சூழ்ச்சி ஒன்றின் மூலம் கவிழ்க்க முயற்சி செய்தனர்...முடியாமல் போனதால் இத்தகைய தாக்குதல்களை முடுக்கிவிட்டதன் மூலம் இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்...இந்த விடயம் ஜனாதிபதிக்கும் தெரியும்...அவரும் இந்த அரசை கவிழ்க்க வேண்டுமென்பதிலும், ராஜபக்ஷர்களை காப்பாற்ற வேண்டுமென்பதிலும் உறுதியாக இருப்பதால் நடவடிக்கை எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்...
இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்

0 comments:
Post a Comment