குருநாகல் - கின்னியம பள்ளிவாசல் மீது இன்று திங்கட் கிழமை இனந் தொியாத நபர்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களினால் பள்ளிவாசலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அத்தோடு தளபாடங்களும் உடைக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களினால் அப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளார்கள். தங்களின் பாதுகாப்பு படைத் தரப்பினர் உறுதி செய்ய வேண்டும். இதற்குாிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் அப்பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
இதே வேளை, இத்தாக்குதல்கள் பௌத்த இனவாதிகள் மேற்கொண்டிருக்கலாமென்று சந்தேகம் தொிவிக்கப்படுகின்றன.


0 comments:
Post a Comment