பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் பரிஸின் Amiens இல் உள்ள Avenue de la Defense Passive பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment