• Latest News

    May 07, 2019

    அமொிக்க ஐ.எஸ் மூலமாக இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்த முயற்சி - விமல்வீரவன்ஸ

    ஐ.எஸ் மூலமாக இலங்கையில் பாாிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கு  அமொிக்கா திட்டமிட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ தொிவித்துள்ளார்.

    அமொிக்காவின் இந்த திட்டத்திற்கு அமைவாகவே இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தொிவித்துள்ளார்.

    அமொிக்காவின் புலனாய்வு பிாிவாகிய CIA மிகவும் நுட்பமாக ஐ.எஸ் அமைப்பினரை பயன்படுத்தி பல நாடுகளின் ஸ்திரத்தன்மையை சீரழித்துக் கொண்டிருக்கின்றது.

    ஐ.எஸ், தலிபான், அல்ஹைதா ஆகியவற்றின் மூலமாக நாடுகளின் ஸ்திரத் தன்மைகள் பாதிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் தற்போது இலங்கைக்கான அமொிக்கத் தூதுவராக செயற்பட்டுக் கொண்டிருப்பவர் இரந்துள்ளார். இவர் லிபியா, சிாியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அமாாிக்கத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

    இன்றைய சூழலில் உதவிகளை வழங்குவதற்கு தயார் என்று அமொிக்கா நுளைவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களை பயன்படுத்தி அமொிக்காவின் FBI நாட்டிற்குள் நுளைந்துள்ளது.

    இலங்கையில் நேடோ இராணுவ முகாமை் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதென்று சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன என்றும் விமல் வீரவன்ஸ தொிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமொிக்க ஐ.எஸ் மூலமாக இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்த முயற்சி - விமல்வீரவன்ஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top