• Latest News

    May 07, 2019

    புத்தளத்தின் மத்திய பகுதியில் இன்று படையினர் சோதனை.

    அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரைபுத்தளம் நகரின் மத்தியில் ராணுவம், போலீஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் தற்சமயம் சுற்றி வளைத்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
    இந்த சுற்றிவளைப்பு வளையத்தில் புத்தளம் நகரின் பிரதான வீதிகளான மரைக்கார் வீதி, மஸ்ஜித் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு பெரிய பள்ளி சதுக்கம் என்பன அடங்கியுள்ளது.
    இது சம்பந்தமாக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது வழமையான தேடுதல் நடவடிக்கை ஒன்று என்றும் இதனால் பொது மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
    இதே நேரம் இந்த சுற்றி வளைப்பின் போது மன்னார் வீதியில் இருந்து நகரின் பிற வீதிகளுக்கு செல்லும் அனைத்து மூலை முடுக்குகளையும் ராணுவம் மறித்து நின்றதால் இந்த நோன்பு காலத்தில் பொது மக்கள் பெரிய அசௌகரியங்களுக்கு உள்ளானதைக் காணக் கூடியதாக இருந்தது.குறிப்பாக புத்தளம் கடற்கரையை அண்டி வாழும் மக்கள் சிரமங்களுக்கு உள்ளானார்கள்.
    இன்றைய தலை நோன்பு நாளன்று படையினரின் இந்தத் தேடுதல் நடவடிக்கையானது ஒரு திட்டமிட்ட செயல்பாடே என இதனால் சிரமங்களுக்குள்ளான பொது மக்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.
    எனவே புத்தளத்தின் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை புறம் தள்ளாது, அல்லது மழுப்பாது இப்படியான தேடுதல்கள், பரிசீலனைகளை காலை நேரங்களில் செயல்படுத்தமாறு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் வேண்டிக் கொண்டார்கள்.
    இதே நேரம் இந்த சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல்கள் மூலம் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் ஆயுதங்கள் எதனையும் கைப்பற்றினார்களா என்பது பற்றிய செய்திகள் எதுவும் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை விசாரிAqfs; : எஸ்.ஸ்ரீதரன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்தளத்தின் மத்திய பகுதியில் இன்று படையினர் சோதனை. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top