• Latest News

    May 17, 2019

    கண்டியில் முஸ்லிம் ஆசிாியைகளின் ஆடைக்கு ஆர்ப்பாட்டம்

    முஸ்லிம் ஆசிாியைகளின் ஆடை தொடர்பில் கண்டியில் பிரபல்யமான மகளிர் பாடசாலை ஒன்றின் பெற்றோர்கள் இன்று  வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு முன்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 

     குறித்த பாடசாலையில் 16 முஸ்லிம் ஆசிாியைகள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் 05 பேர் பாடசாலைக்கு சேலை கட்டி வருவதற்க மறுப்பு தொிவித்தமை காரணமாகவே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

    இன்று குறித்த ஆசிாியைகள் பாடசாலைக்கு வருகை தந்த போது பாடசாலைக்குள் நுளைவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. இப்பிரச்சினை பற்றி மத்திய மாகாண ஆளுநர் மைத்திாி குணவர்த்தனவிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்டியில் முஸ்லிம் ஆசிாியைகளின் ஆடைக்கு ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top